மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்
  • Home
  • மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்

Save

மன்னார் மறைமாவட்டத்தின் நான்காவது புதிய ஆயராக நியமனம் பெற்றுள்ள பேரருட்கலாநிதி. ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஆயத்துவ அபிஷேக நிகழ்வானது  22-02-2025 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு (இலங்கை நேரம்) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி. இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் மன்னார் மடுத் திருத்தலத்தில் நடைபெற்றது.  இத்திருச் சடங்கில் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்கலாநிதி. பிறாயன் உடக்குவே, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித், ஏனைய மறை மாவட்ட ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள்,  இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

புதிய ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பேரருட்கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் மன்னார் மறைமாவட்டத்தை பொறுப்பெடுக்கும் நிகழ்வு 23-02-2025 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு (இலங்கை நேரம்) மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.

26-02-2025 புதன்கிழமை மாலை 5மணிக்கு (இலங்கை நேரம்) மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட்கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை  அவர்கள் தான் பிறந்து வளர்ந்த ஊராகிய மன்னார் அடம்பன் பங்கின் மூங்கில் முறிச்சான் தூய அடைக்கல அன்னை ஆலயத்தில்  தனது ஆயத்துவ அபிஷேகத்தின் நன்றித்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

புதிய ஆயர் பேரருட்கலாநிதி.  ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் மன்னார் மறைமாவட்ட குருக்களிலிருந்து நியமனம்பெற்ற முதலாவது ஆயரென்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஆயரின் பணிவாழ்வு சிறக்க சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க ஆன்மிகப்பணியம்  சார்பாக செபத்துடன் கூடிய வாழ்த்துக்களை கூறி நிற்கின்றோம்

   

 

   

 

   

 

   

 

Share:

More Posts

மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருப்பொழிவு நிகழ்வு
புனித காணிக்கை மாதா திருவிழா
இளையோர் ஒன்றுகூடல்