மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வர்
  • Home
  • மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வர்

Save

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய குருமுதல்வராக மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்பணி. தமிழ் நேசன் அவர்கள் மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட்கலாநிதி. ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக மடுத்திருப்பதியில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானத்தின் நிறைவில் இன்று வெள்ளிக்கிழமை (14.03.2025) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

1969ஆம் ஆண்டு முருங்கனில் பிறந்த இவர்,1997ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். கடந்த 28 வருடங்களாக மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு பணிப் பொறுப்புக்களை வகித்து வருகின்றார்.

சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் சார்பாக மன்னார் மறைமாவட்டத்தில் இதுவரை காலம் குருமுதல்வராக பணியாற்றிய அருட்பணி. கிறிஸ்துநாயகம் அவர்களுக்கு எமது செபத்துடன் கூடிய நன்றிகளையும், புதிய குருமுதல்வர் அருட்பணி. தமிழ்நேசன் அவர்களுக்கு எமது செபத்துடன் கூடிய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Share:

More Posts

மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருப்பொழிவு நிகழ்வு
புனித காணிக்கை மாதா திருவிழா
இளையோர் ஒன்றுகூடல்