முக்கிய அறிவித்தல் – நேரம் மாற்றம் – தவக்கால சிறப்பு வழிபாடு
  • Home
  • முக்கிய அறிவித்தல் – நேரம் மாற்றம் – தவக்கால சிறப்பு வழிபாடு

Save

முக்கிய அறிவித்தல் – நேரம் மாற்றம் – தவக்கால சிறப்பு வழிபாடு

அன்பார்ந்த இறைமக்களே! தவிர்க்க முடியாத காரணத்தினால் தவக்கால சிறப்பு வழிபாட்டு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாண்டிற்கான தவக்கால சிறப்பு வழிபாடு சித்திரை மாதம் 12ம் திகதி (12-04-2025) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு  ஓல்ரன் புனித மார்டின் ஆலயத்தில்  (Kirche St.Martin, Ringstrasse 38, 4600 Olten) நடைபெறும். முன்னர் மதியம் 14 மணிக்கு ஆரம்பமாகும் என அறியத்தந்திருந்தோம். ஆலய நிர்வாக ஒழுங்கமைப்பு மாற்றங்களுக்கேற்ப தவிர்க்க முடியாத காரணங்களினால் காலை 9.30 மணிக்கு திருச்சிலுவைப்பாதையுடன் ஆரம்பமாகி, தொடர்ந்து நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் தவக்கால விசேட திருப்பலியும் நடைபெறவிருக்கின்றது. இவ் நேர மாற்றத்தினால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்காக மனம் வருத்துகின்றேன்.

இறைமக்களே! ஒப்புரவு அருட்சாதனம் (பாவசங்கீர்த்தனம்) பெறவிருப்பர்களுக்காக குருக்கள் காலை 8.30 மணி தொடக்கம் ஆயத்தமாக இருப்பார்கள். எனவே ஒப்புரவு அருட்சானம்பெற இருப்பவர்கள் வழிபாட்டுக்கு முன்பதாகவும் இவ்வருட்சாதனத்தை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதை அறியத்தருகின்றேன்.

எனதன்பார்ந்த சுவிஸ் வாழ் இறைமக்களே! இவ்நேரமாற்றத்தை கவனத்தில் கொண்டு நீங்கள் அனைவரும் இவ்வழிபாட்டு நிகழ்வில் பங்குபற்றி தியானித்து, இறையாசீரைப்பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

அருட்பணி. ஆ.யூட்ஸ் முரளிதரன்

ஆன்மிக இயக்குனர்.

Share:

More Posts

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வர்
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்
றொமாண்சோர்ன் பணியக புனித காணிக்கை அன்னை திருவிழா