றொமாண்சோர்ன் பணியக புனித காணிக்கை அன்னை திருவிழா
  • Home
  • றொமாண்சோர்ன் பணியக புனித காணிக்கை அன்னை திருவிழா

Save

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது திருவிழாவாக றொமாண்சோர்ன் பணியகத்தின் பாதுகாவலியாம் புனித காணிக்கை அன்னை திருவிழாவானது 08.02.2025 அன்று சனிக்கிழமை மாலை 15.30மணியளவில் புனித அருளப்பர் ஆலயமண்டபத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது.
திருச்செபமாலையைத் தொடர்ந்து அன்னையை பவனியாக ஆலயத்துக்கு எடுத்துச் சென்று திருவிழாத் திருப்பலி ஆரம்பமாகியது. இத்திருவிழா திருப்பலியினை அருட்பணி ஜெறி ஜோசப், இயக்குநர் அருட்பணி. யூட்ஸ் முரளிதரன் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியினைத் தொடர்ந்து எமது இயக்குநர் அருட்பணி. யூட்ஸ் முரளிதரன் அவர்களினால் காணிக்கை அன்னையின் திருச்சுருப ஆசீர் வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் பணியக மக்களோடு ஏனைய பணியகங்களைச் சேர்ந்த இறைமக்களும் பக்தியாக பங்கேற்று அன்னையின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்தனர்.

   

 

   

 

    

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

 

 

   

 

   

 

   

 

   

 

    

Share:

More Posts

புனித காணிக்கை மாதா திருவிழா
இளையோர் ஒன்றுகூடல் 
ஆன்மிக நிகழ்வுகள்