சுக் ஆன்மிகப் பணியகத்தின் தூய மரியன்னை பெருவிழா 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 15.30 மணிக்கு புனித மிக்கேல் ஆலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்து நாயகம் அவர்களின் தலைமையில், அருட்பணி. பிரசாந் அமதி, அருட்பணி. ரமேஸ் அமதி, எமது ஆன்மிக இயக்குநர் அருட்பணி. யூட்ஸ் முரளிதரன் ஆகியோர் இணைந்து இத்திருவிழாத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியினைத் தொடர்ந்து தூய மரியன்னையின் திருச்சுரூப பவனி நடைபெற்றது. தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்துநாயகம் அவர்களால் தூய மரியன்னையின் திருச்சுரூப ஆசீர் வழங்கப்பட்டது. சுக் ஆன்மிகப்பணியக இறைமக்கள் ஏனைய பணியக இறைமக்களையும் இணைத்து கொண்டாடிய இத்திருவிழாவில் கூடுதலான இறைமக்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்று அன்னை மரியின் சிறப்பு ஆசீரைப் பெற்று மகிழ்ந்தனர்.