19-11-2023 ஞாயிற்றுக்கிழமையன்று சூரிச் Weidikon திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மன்னார் ஆயர் மேதகு. இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுத்து, இறைமக்களுக்கு இறையாசீர் வழங்கினார்.
Save
திருப்பலியினைத் தொடர்ந்து மகிழ்வூட்டும் ஒன்று கூடல் நடைபெற்றது. இவ்வொன்று கூடலின் போது சூரிச் பணியக இளையோர் நடனமாடி ஆயரை மகிழ்வித்தனர். இந்நிகழ்வினை ஒழுங்குபடுத்தியவர்களுக்கும், பங்கு பற்றிய அனைத்து இறைமக்களுக்கும் எமது செபத்துடன் கூடிய நன்றிகள் உரித்தாகட்டும்.