தவக்கால சிறப்பு வழிபாடு
  • Home
  • தவக்கால சிறப்பு வழிபாடு

Save

2025 ஆம் ஆண்டிற்கான சிறப்பு தவக்கால வழிபாடானது ஓல்ரன் புனித மாட்டீன் ஆலயத்தில் 12.04.2025 சனிக்கிழமை நடைபெற்றது. புனித வாரத்தை ஆரம்பிக்கும் முகமாக இந்த வழிபாடானது சிறப்பாக நடந்தேறியது. காலை 9.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பிக்கப்பட்ட வழிபாடானது திருப்பலியுடன் நிறைவேறியது.

திருச்செபமாலையைத்தொடர்ந்து சிலுவைப்பாதையை நல்ல பல சிந்தனைகளுடன் அருட்பணி. ரஜனிக்காந், எமது இயக்குநர் அருட்பணி. முரளிதரன் ஆகியோர் இணைந்து நடத்தினர்.பின் நற்கருணை வழிபாடானது எமது உள்ளத்தையும் ஆன்மாவையும் தொட்ட ஒரு சிறந்த தருணமாக இருந்தது. இதனையும் எமது இயக்குநரும் அருட்பணி. ரஜனிக்காந்தும் இணைந்து நடாத்தி நற்கருணை ஆசீரை வழங்கினர்.அத்தோடு ஒப்புரவு அருட்சாதனமும் வழங்கப்பட்டது. இந்த அருட்சாதனத்தை அருட்பணி. டேமியன், அருட்பணி றூபன், அருட்பணி. காளான், அருட்பணி. பவுல், அருட்பணி. வினோதன் ஆகியோர் வழங்கினர்.

இறுதியில் சிறப்புத்திருப்பலியுடன் வழிபாடானது நிறைவேறியது. இந்த வழிபாட்டில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து இறையாசீரைப் பெற்றனர். இந்த வழிபாட்டை சிறப்புற அமைய ஒழுங்கு செய்த இயக்குநருக்கும், அவரோடு இணைந்து உதவிகள் புரிந்த அருட்பணியாளர்களுக்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share:

More Posts

புனித காணிக்கை மாதா திருவிழா
இளையோர் ஒன்றுகூடல் 
ஆன்மிக நிகழ்வுகள்