ஆன்மிக நிகழ்வுகள்
  • Home
  • ஆன்மிக நிகழ்வுகள்

Save

அன்பானவர்களே,

இந்த வருடத்திற்குரிய  ஒரு முக்கிய ஆன்மிக நிகழ்வாக வருகின்ற மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை மாலை 15.30 மணிக்கு ஓல்டன் மரியன்னை ஆலயத்தில் குணமாக்கல், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என முக்கிய ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றது. ஆகவே நாம் இந்த வருடத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற படியாலும், வருகின்ற மாதமானது இறந்தவர்களை நினைவு கூருகின்ற அதாவது எங்களுடைய வாழ்வின் நிலையாமையை நினைக்கின்ற காலமாகவும் இருக்கின்ற படியால், இந்த புலம்பெயர்நாட்டில் கடவுளின் இரக்கம், அவருடைய பிரசன்னத்தின் வெளிப்பாட்டை முழுமையாக அனுபவிக்கும் முகமாக இந்த வழிபாடானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே தயவுசெய்து விரும்பியவர்கள் அனைவரும் இந்த ஆன்மிக நிகழ்வில் கலந்து கொண்டு கடவுளின் இரக்கத்தையும் இறைஆசீரையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகின்றேன்.  வரவிரும்புகின்ற அனைவரும் தயவுசெய்து உங்கள் பணியக WhatsApp குழுவில் பதிவிடுங்கள். அவ்வாறு பதிவிட்டால் உணவு ஒழுங்குகள் செய்வதற்கு இலகுவாக இருக்கும். எனவே விரைவாக உங்கள் வரவினை பதிவிடுங்கள். இந்த அருமையான ஆன்மிக நிகழ்வில் கலந்து கொண்டு இறையாசீரைப்பெற மீண்டுமாக அழைத்து நிற்கின்றேன்.

நன்றி .

சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம்,

இயக்குநர்,

அருட்பணி.ஆ. யூட்ஸ் முரளிதரன்

Share:

More Posts

தவக்கால சிறப்பு வழிபாடு
பரிசுத்த வார திருப்பலி நேர அட்டவணை1
முக்கிய அறிவித்தல் – நேரம் மாற்றம் – தவக்கால சிறப்பு வழிபாடு