அன்பான இறைமக்களே!
19.10.2024 அன்று நடைபெற்ற ஆன்மிக அறிவுப்போட்டிகளில் ஆர்வமாய் பங்கேற்ற உங்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன். பல்வேறு சிரமங்கள் மத்தியிலும், பிள்ளைகளை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, ஆன்மிக அறிவில் வளர்த்தெடுத்த பெற்றோர்கள், மறையாசிரியர்கள் உங்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன்.
கீழே போட்டிகளின் முடிவுகளை நீங்கள் காணலாம். இதில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. எமது இறையறிவை வளர்த்துக்கொள்வதே மிக முக்கியம். ஆனாலும் மனம் தளராது தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். எல்லோரும் வெற்றியடையலாம். மீண்டும் ஒருமுறை எல்லோரையும் வாழ்த்தி நிற்கின்றேன்.
நன்றி.
இறையாசீருடன்,
அருட்பணி.ஆ. யூட்ஸ் முரளிதரன்