இளையோர் ஒன்றுகூடல் 
  • Home
  • இளையோர் ஒன்றுகூடல் 

Save

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இளையோருக்கான வருடாந்த இறுதி ஒன்றுகூடலானது 23.11.2024 சனிக்கிழமையன்று ஓல்ரன் புனித மரியன்னை ஆலய மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்த ஒன்று கூடலானது சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இளையோர் குழுவினரால் திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பணியக இயக்குநர் அருட்பணி. ஆ. யூட்ஸ் முரளிதரன் அவர்களின் தலைமையில் வழிநடத்தப்பட்டு நடைபெற்றது. இவ்வொன்றுகூடலில் எண்பதிற்கும் மேற்பட்ட இளையோர் பங்குபற்றி மகிழ்ச்சியாக களித்தனர். அத்துடன் இவ்விளையோர் இதுவரை காலமும் தாங்கள் கற்ற மறைக்கல்வியை ஞாபகப்படுத்தும் முகமாக பயிற்சிப் பட்டறைகளும், தங்கள் ஆற்றல்களை; திறமைகளை வளர்க்கும் விதமாக கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் பங்கேற்று பயனடைந்த இளையோர்களுக்கும், இவர்களை ஊக்கப்படுத்தி அனுப்பிய பெற்றோர்களுக்கும், இந்த நிகழ்வினை ஒழுங்கமைத்து பல்வேறு வழிகளில் உதவி செய்த அனைவருக்கும் எமது செபத்துடன் கூடிய நன்றிகள்.

Share:

More Posts

மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருப்பொழிவு நிகழ்வு
புனித காணிக்கை மாதா திருவிழா
ஆன்மிக நிகழ்வுகள்