புனித பேதுரு திருவிழா( லுட்சேர்ண் பணியகம்)
  • Home
  • புனித பேதுரு திருவிழா( லுட்சேர்ண் பணியகம்)

Save

லுட்சேர்ண் பணியக மக்களின் பாதுகாவலரான புனித பேதுரு திருவிழாவானது 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை 15.15 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது. திருவிழாத் திருப்பலியை கனடா நாட்டில் பணியாற்றும் அருட்பணி கனிசியஸ் அடிகளார் தலைமையில் அருட்பணி. ரஜனிகாந்த், இயக்குநர் அருட்பணி முரளிதரன் ஆகியோரும் இணைந்து நிறைவேற்றினர். திருவிழாத் திருப்பலியில் மறையுரையை அருட்பணி ரஜினிகாந்த் அடிகளார் வழங்கினார். அத்துடன் திருவிழா முன்னாயத்த நற்கருணை வழிபாட்டினையும் அருட்பணி ரஜனிகாந்த் சிறப்பாக நடத்தி இருந்தார். திருவிழாத்திருப்பலியின் இறுதியில் புனித பேதுருவின் திருச்சுரூபமானது ஆலயத்தினுள் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு இறுதியில் இயக்குநரால் புனிதரின் ஆசீர் வழங்கப்பட்டது. இந்தத் திருவிழாவிற்கு ஏனைய பணியகங்களைச் சேர்ந்த இறைமக்களும் கலந்து புனிதரின் ஆசீரைப் பெற்றனர். முடிவில் பணியக மக்களினால் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

      

 

   

 

   

 

 

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

 

 

Share:

More Posts

புனித அந்தோனியார் திருவிழா(பாசல் பணியகம்)
புனித லூர்து அன்னை திருவிழா (ஆர்கவ் பணியகம்)
புனித பேதுரு திருவிழா (லுட்சேர்ண் பணியகம்)