ஆன்மீக கருத்தமர்வு
  • Home
  • ஆன்மீக கருத்தமர்வு
18-11-2023 சனிக்கிழமையன்று ஓல்ரன் புனித மரியன்னை ஆலயத்தில் சுவிஸ் ஆன்மீகப்பணியகத்தின் அனைத்துப்பணியாளர்களுக்குமான ஆன்மீகக்கருத்தமர்வு நடைபெற்றது.

Save

இந்நிகழ்விற்கு அனைத்து பணியகங்களின் பணியாளர்களும் பங்குபற்றி பயன்பெற்றனர். இக்கருத்மர்வினை யாழ் புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியின் மெய்யியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றும் அருட்பணி. ஜேம்ஸ் நாதன் அவர்கள் “பணியாளர்களின் ஆன்மீகக்கடமைகளும், பொறுப்புக்களும்” என்ற கருப்பொருளில் உரையிற்றியதுடன், நற்கருணை வழிபாட்டையும் நடத்தினார். அத்துடன் மன்னார் மருதமடுமாதா சிறிய குருமட முன்னாள் மாணவரும், மனித உரிமை ஆர்வலருமான திரு. பிரான்சிஸ் மைக்கல் டியூட்டர் அவர்களும் இக்கருத்தமர்வில் சிறப்புரையாற்றி, மக்களை ஊக்குவித்தார்.
கருத்தமர்வினைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு. இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அன்றைய நாள் நிகழ்வுகள் அனைத்திலும் கடமையுணர்வோடும், பக்தியோடும் கலந்து கொண்டு பயன்பெற்ற அனைவருக்கும், கருத்தமர்வினையும் ஏனைய நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தியவர்களுக்கும் எமது நன்றியுடன் கூடிய இறையாசீரும் உரித்தாகட்டும்.

 

Share:

More Posts

பேர்ண் பணியக பாதுகாவலர் புனித சூசையப்பர் திருவிழா
எதிர்நோக்கின் திருப்பயணிகளின் திருப்பயணம்
புனித லூர்து அன்னை திருவிழா