இதில் 17 பேர் பங்கு பற்றினர். இவ்வகுப்பிற்கு உரைஞர்களாக அருட்பணி. ஜெறி யோசப், திரு. மைக்கல் டியூட்டர், திருமதி. அமலா யோண்சன், திருமதி. றொசிற்றா கனிசியஸ், திருமதி. ஜெயந்தி ஜீவா ஆகியோர் பங்கெடுத்து பல்வேறு தலைப்புக்களில் அவர்களுக்கு உரைகளை வழங்கினர். இதனை எமது இயக்குநர் அருட்பணி.யூட்ஸ் முரளிதரன் ஒழுங்குபடுத்தியிருந்தார். இதில் கலந்துகொண்ட அனைவரும் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய செய்திகளையும், விபரங்களையும் அறிந்துகொண்டனர்.
மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகளாரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டு திருமணமாக இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அறிவுரைகளை வழங்கியதோடு சான்றிதழ்களையும் வழங்கினார். குருமுதல்வருக்கு எமது செபத்துடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.